தலைவர் 171 – சம்பவம் உறுதி… சாண்டி மாஸ்டர் மாஸ் அப்டேட்

தலைவர் 171 – சம்பவம் உறுதி… சாண்டி மாஸ்டர்  மாஸ் அப்டேட்
  • PublishedApril 3, 2024

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் துவங்கிய தன்னுடைய திரையுலக பயணத்தை அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார்.

இவரது வெற்றிப் பயணம் மிகவும் குறுகியது, ஆனால் மிகப்பெரியது, மாநகரம் மற்றும் கைதி படங்களை ஒரே இரவில் நடப்பது போன்ற கதைகளத்தில் கொண்டு சென்று மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள ரஜினிகாந்த்தின் தலைவர் 171 படத்தின் கதையும் ஒரே நாளில் நடப்பது போன்ற கதைகளத்தில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் வரும் 22ம் தேதி படத்தின் டைட்டில் பிரமோ வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் இதுவரை இல்லாதவகையில் ரஜினிகாந்தை வித்தியாசமாக காட்டவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் ஆனால் அவரது கேரக்டர் ஒன்றுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து மாஸ் காட்டியுள்ளார். விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் பத்தல பத்தல பாடலை இவர் கொரியோகிராப் செய்திருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே ரீச் ஆனது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் வெளியான விஜயின் லியோ படத்தில் இவர் அதிரடி வில்லனாக காட்டப்பட்டிருந்தார். இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து கொடூரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சாண்டி மாஸ்டர் நடித்திருந்த இந்த காட்சிகள் படத்தின் துவக்கத்தில் பத்து நிமிடங்களே வந்த போதிலும் இந்த காட்சியை படத்தின் மிக முக்கியமான காட்சிகளாக காணப்பட்டன. இந்த சம்பவம் மூலமாகவே விஜய்யின் சுயம் வில்லன்களுக்கு வெளியாவதாகவும் காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டர் நடிகராகவா அல்லது நடன இயக்குனராகவா எப்படி செயல்பட போகிறார் என்பது குறித்து அவரிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சாண்டி மாஸ்டர், ஒரு சிறப்பான சம்பவம் காத்திருப்பதாகவும் அது குறித்து விரைவில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டர் இணைவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *