இந்தியன் 2 இசை வெளியீடு.. பிரம்மாண்ட மேடையில் ராணியாக வந்த விஜய் மனைவி

இந்தியன் 2 இசை வெளியீடு.. பிரம்மாண்ட மேடையில் ராணியாக வந்த விஜய் மனைவி
  • PublishedJune 1, 2024

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் அவரது இந்தியன் 2 படம் ரிலீசாக உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக அடுத்தடுத்து ஆறு மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள சூழலில் இன்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் நடந்தது.

இதில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய்யின் மனைவி சங்கீதாவும் இணைந்துள்ளார். இதனிடையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா உள்ளிட்டவர்களும் இந்த ஆடியோ லாஞ்சில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், காஜல் அகர்வால் ஆகிய படக்குழுவினரும் இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

சித்தார்த் தற்போது வெளிநாட்டில் உள்ள சூழலில் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *