விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா?
  • PublishedSeptember 9, 2024

நடிகர் விஜய், இவர் நடிப்பில் ‘தி கோட்’ படம் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. விஜய் நடிக்கும் தளபதி 69 படம்தான் சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம், அதன் பின் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ள விஜய் சினிமாவை விட்டு விலகவுள்ளார்.

சினிமாவை விட்டு விஜய் விலகவுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழையவுள்ளார். தந்தையை போல மகன் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தாத்தாவை போல் இயக்குனராக என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஜேசன்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா குறித்துப் படித்த பின் குறும்படங்கள் இயக்கினார். இயக்கம் தான் அவரது விருப்பம்.

லைகா தயாரிப்பில் தனது முதல் படத்தை அவர் இயக்குவதாக கடந்த வருடம் ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. அவரது படத்தில் ஹீரோ இவர்தான் என்று துல்கர் சல்மான், கவின், விக்ரம் மகன் துருவ் விக்ரம் என்று பலரது பெயர் வதந்திகளாக அடிபட்டது.

விஜய் மகன் சஞ்சய் லைகா தயாரிப்பில் படம் இயக்குகிறார் என்ற தகவல் மட்டும் அதிகாரபூர்வமாக வெளியானதே தவிர படத்தின் நாயகன், நாயகி யார் என்று தகவல் எதுவும் வெளியாகமலே இருந்தது.

இந்த நிலையில் சஞ்சய் இயக்கவிருக்கும் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சஞ்சய் இயக்கவிருக்கும் படம் கிரிக்கெட் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், ‘ராயன்’ படத்தில் நடித்த சந்தீப் கிஷன் தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ என்ற தகவலும் வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *