“Say no to temporary Pleasures, say no to drugs” மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தார் விஜய்

“Say no to temporary Pleasures, say no to drugs” மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தார் விஜய்
  • PublishedJune 28, 2024

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொள்ள காலை முதலே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்த நிலையில், நடிகர் விஜய் 10 மணியளவில் மாஸ் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் உள்ளே வந்ததும் அங்கு வந்திருந்தவர்களுக்கு மேடையேறி நன்றி சொன்ன விஜய், பின்னர் கீழே சென்று மாணவர்களுடன் அமர்ந்துகொண்டார்.

இதையடுத்து பேசுவதற்காக மேடைக்கு வந்த விஜய், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கங்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்ததோடு, மாணவ மாணவிகள் அனைவரும் Say no to temporary Pleasures, say no to drugs என்கிற உறுதி மொழியை ஏற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். அவர் பேசியதை விரிவாக பார்க்கலாம்.

வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு பின் பெற்றோர்களை விட அதிகமாக நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவிடக்கூடிய சூழல் ஏற்படும், அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். தமிழ்நாட்டில் போதை பொருட்களின் பயன்பாடு ரொம்ப அதிகமாகிவிட்டது.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றொர் என்கிற முறையில், ஒரு அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்கிற முறையில் எனக்குமே ரொம்ப அச்சமாகத் தான் இருக்கிறது.

இந்த போதைப் பொருட்களை எல்லாம் கட்டுப்படுத்துவது அரசுடைய கடமைனு சொல்லலாம். இளைஞர்களை இதிலிருந்து காப்பாற்றுவதும் அரசின் கடமை, ஆளும் அரசு அதையெல்லாம் தவறவிட்டுட்டாங்க அப்படிங்கிறத பத்திலாம் நான் இங்கு பேச வரல.

அதற்கான மேடையும் இது இல்ல. சில நேரங்களில் அரசாங்கத்தை விட நம்ம லைஃபை நாம தான் பாத்துக்கணும். சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். Say no to temporary Pleasures, say no to drugs என்கிற இந்த உறுதி மொழியை நீங்க எல்லாரும் கடைபிடிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறி தன் உரையை முடித்துக் கொண்டார் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *