அனிரூத் பாட.. ஷாருக்கான் ஆட்டம் போட.. ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் மாஸ் வீடியோ

அனிரூத் பாட.. ஷாருக்கான் ஆட்டம் போட.. ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் மாஸ் வீடியோ
  • PublishedAugust 30, 2023

‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிரூத்துடன் நடிகர் ஷாருக்கான் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’  திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சிறப்புத்தோற்றத்தில் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் அனிரூத்தின் ராக்கிங் பெர்பாமன்ஸ் நடைபெற்றது. அப்போது அனிரூத்துடன் இணைந்து ஷாருக்கானும் டான்ஸ் ஆடினார். இது குறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *