ஷாலினிக்கு திடீர் ஆப்பரேஷன்! பதறியடித்து வந்த அஜித்

ஷாலினிக்கு திடீர் ஆப்பரேஷன்! பதறியடித்து வந்த அஜித்
  • PublishedJuly 3, 2024

நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் சென்ற நிலையில், மனைவி ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் பதறியடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்துள்ளார்.

மருத்துவமனையில் அஜித் ஷாலினியின் கையை பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக நடிகர் அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை ஷாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

நடிகர் அஜித் சென்னைக்கு திரும்புவாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தனது மனைவியை காண வந்து விட்டார்.

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியின் கைகளை மருத்துவமனையில் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லும் போது எடுக்கப்பட்ட க்யூட்டான புகைப்படத்தை ‘Love You Forever’ என்கிற சூப்பர் க்யூட்டான கேப்ஷனுடன் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *