அப்டேட் ஆகாமல் இருக்கும் பிரம்மாண்ட இயக்குனர்… சங்கர் இப்படியா??

அப்டேட் ஆகாமல் இருக்கும் பிரம்மாண்ட இயக்குனர்… சங்கர் இப்படியா??
  • PublishedJanuary 4, 2025

ஒரு காலத்தில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கியவராக இருந்தார் இயக்குனர் சங்கர்.

கடைசியாக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்தது இந்தியன் 2 படம். அந்த படம் மிக மோசமான அனுபவத்தை சங்கருக்கு கொடுத்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் வந்த படமான இது ஃபெயிலியர் லிஸ்டில் சேர்ந்தது.

2018 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 2.0.அதன் பின்னர் ஆறு வருட இடைவேளைக்கு பின்னர் தான் இவர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் வெளிவந்தது. இப்பொழுது இந்த ஆண்டு பொங்கலுக்கு ராம்சரனை வைத்து இவர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் வெளிவர உள்ளது.

மத்த இயக்குனர்களை காட்டிலும் சங்கர் அப்டேட்டில் மிகவும் பின்தங்கியவராகவே இருக்கிறார். இவருக்கு தெரிந்தது பிரம்மாண்டம், விலை உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட கேமரா இதை மட்டும் வைத்து பழைய பஸ் ஸ்டாண்டிலேயே வண்டிகளுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது கேம் சேஞ்சர் படமும் அப்படித்தான் தெரிகிறது. அருக பழைய டயலாக், ஜென்டில்மேன் இந்தியன், முதல்வன் போன்ற அதே கதைக்களம். குறிப்பாக அரசியல் ஊழலை கொண்ட கதைகள், வசனங்கள் என குண்டு சட்டிக்குகுள்ளையே குதிரை ஓட்டு வருகிறார்.

சங்கர் யார் சொன்னாலும் கேட்கக்கூடிய கேரக்டர் கிடையாதாம். குறிப்பாக அவருடைய உதவி இயக்குனர்கள் ஏதேனும் புதிதாய் ஒரு கருத்தை சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டாராம். நன்றாக இருந்தால் கூட ரிஜெக்ட் செய்து விடுவாராம். இதுதான் அவர் சறுக்கல்களுக்கு காரணமாய் அமைந்து வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *