பிரபல நடிகர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி திடீர் மரணம்

பிரபல நடிகர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி திடீர் மரணம்
  • PublishedMarch 25, 2025

பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமான கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணமடைந்துள்ளார்.

இவருடைய அதிரடி சமையல் நிகழ்ச்சியை 90ஸ் கிட்ஸால் மறக்கவே முடியாது. இவர் ரத்த புற்றுநோயால் மாத்திக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஷிகான் ஹுசைனி உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முன்னதாக ஷிகான் ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார்.

தற்போது சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 வரை அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *