பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா…நடிகை ஷிவானி

சின்னத்திரையின் மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். சீரியலில் நடித்து வந்த இவர் தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்ளை கவணர்தார்.
பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இதன்பின் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
சமீபத்தில் நடிகை ஷிவானி தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டவதாகவும், அதனால் தான் அவருடைய முகம் சற்று மாறியுள்ளது என்றும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து நடிகை ஷிவானி வெளிப்படையாக பேசியுள்ளார். இதில் “நான் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் பண்ணல. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என்று நிறைய பேர் சொல்றாங்க. கடந்த சில நாட்களாக இந்த செய்தி நிறைய பரவிட்டு இருந்தது. உண்மைய சொல்லணும்னா அப்படி நான் செய்யவில்லை. அப்படி செய்வது ஈஸி இல்ல, அதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்று நான் நினைக்கிறேன்.
ஈசியாக எல்லாருமே அதை பண்ணிட முடியாது. கண்டிப்பாக நான் பண்ணல. நான் கடந்த ஒரு வருடமாக ஹெல்த்தி டயட் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். அதனால கூட என்னுடைய முகம் அப்படி மாறி இருக்கலாம்” என கூறி பரவி வரும் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துளார்.