சோபிதா துலிபாலாவின் முன்னாள் காதலர் இவரா?
நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது.
நாக சைதன்யாவிற்கு ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்து 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
ஆனால், நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்துள்ள நடிகை சோபிதாவும் இதற்கு முன் பிரணவ் மிஸ்ரா என்பவரை காதலித்து டேட்டிங் செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
பிரணவ் மிஸ்ரா பேஷன் டிசைனர் ஆவாராம். இருவரும் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் தான் சந்தித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் இருந்து இருவரும் நெருக்கமாக பழகி டேட்டிங் செய்து வந்த நிலையில், 2020ஆம் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதன்பின் 2022ஆம் ஆண்டு தான் நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை சோபிதாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் இணைந்து நெருக்கமாக பழகி வந்த நிலையில், தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.