‘இதற்கு பதிலளிக்க முடியாது’ தமன்னாவின் காதலரின் அறிவிப்பால் அதிர்ச்சி…

‘இதற்கு பதிலளிக்க முடியாது’ தமன்னாவின் காதலரின் அறிவிப்பால் அதிர்ச்சி…
  • PublishedNovember 26, 2023

தமன்னாவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகர் விஜய் வர்மா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு கல்லூரி, வியாபாரி படங்களில் நடித்து பிரபலமான அவர் தொடர்ந்து பிஸியாக வலம் வர ஆரம்பித்தார்

அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார்.

தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றது.

பாலிவுட்டில் பக்கம் ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார்.

Tamannaah Bhatia

இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தனர்.

ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி இரு வீட்டார் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் வர்மாவிடம் செய்தியாளர்கள் தமன்னாவுடன் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, ‘இதற்கு பதிலளிக்க முடியாது’ என ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் விஜய் வர்மா பதிலளிக்க மறுக்கிறார். ஒருவேளை இரண்டு பேருக்கும் இடையே ஊடல் எதுவும் ஆரம்பித்துவிட்டதோ என சந்தேகத்தை கிளப்பிவருகின்றனர்.

இதற்கிடையே சமீபத்தில் தமன்னாவிடமும் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவரோ, திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறேன். தயாராகிவிட்டேன் என்று உணர்ந்த பிறகு திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *