வெடித்தது. ஆடி கார் டயர்.. திரையுலகின் பிரபலம் திடீர் மரணம்!

வெடித்தது. ஆடி கார் டயர்.. திரையுலகின் பிரபலம் திடீர் மரணம்!
  • PublishedSeptember 4, 2023

சாலை விபத்தில் சிக்கி, பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரை படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளர் தஷி.

தன்னுடைய நண்பர்களுடன் ரியல் எஸ்டேட் வியாபாரம் தொடர்பாக கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், இவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் இசையமைப்பாளர் மற்றும் அவருடைய நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் தசி மற்றும் அவருடைய நண்பர்களான மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ், ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கேரளாவில் இருக்கும் இடம் ஒன்றை பார்த்து பேசி விட்டு, மிகவும் மகிழ்ச்சியாக நான்கு பேரும் அவர்கள் சென்ற சொகுசு காரில் சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.

இவர்கள் வந்த கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழக்கரை பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது, ஆடி காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கார் நிலை தடுமாறி, கண் இமைக்கும் நேரத்தில் அருகே இருந்த தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. எனவே முன்பக்கத்தில் இருந்த இசையமைப்பாளர் தசி மற்றும் அவருடைய நண்பர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் அடியான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *