சமந்தாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த ஷ்ருதிஹாசன்… நடந்தது என்ன?

சமந்தாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த ஷ்ருதிஹாசன்… நடந்தது என்ன?
  • PublishedJanuary 25, 2024

நடிகை சமந்தா கோலிவுட்டில் இருந்து டோலிவுட், பாலிவுட் என கலக்கியவர். அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு கூட ஒன்று வந்தது, அந்த அறிவிப்பை அவர் வெளியிட ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

ஆனால் இப்போது நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்மையில் கூட ஒரு போட்டோ ஷுட் வீடியோ வெளியிட்டவர் கையில் டிரிப்ஸ் ஏற்றியபடி உட்கார்ந்திருந்தார்.

அவர் இன்னும் முழுவதுமாக குணமடையவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு தான் வருகின்றனர்.

ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் என்பவர் இயக்கவிருந்த சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படத்தில் தான் சமந்தா நாயகியாக நடிக்க இருந்தார்.

சமந்தாவிற்கு பதிலாக இப்போது அந்த ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசனாக நடிக்கிறாராம், அதில் டிடெக்டிவ் கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

மேலும் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *