வில்லி நடிகையை கரெக்ட் செஞ்ச முரட்டு சிங்கிள்… யாருனு தெரியுமா?

வில்லி நடிகையை கரெக்ட் செஞ்ச முரட்டு சிங்கிள்… யாருனு தெரியுமா?
  • PublishedJanuary 29, 2024

தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்ட முரட்டு சிங்கிள், இப்போது ஒரு வழியாக வில்லி நடிகையை கரெக்ட் செய்து விட்டார்.

40 வயது ஆகியும் நடிகர் தொடர் காதல் தோல்வியை சந்தித்தும், அதோடு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்தார்.

அதன் பின் மீண்டும் உடல் எடையை குறைத்து தனது செகண்ட் இன்னிங்ஸில் மாநாடு, வெந்த தணிந்து காடு என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது சிம்பு தன்னுடைய 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் இவர் போகிற இடத்தில் எல்லாம், எப்போது திருமணம்? என்ற கேள்வி தான் கேட்கப்படுகிறது.

ஏனென்றால் இவருடைய தம்பி, தங்கைக்கு கூட கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது. இவரும் நயன்தாராவும் காதலித்து பின், பிரேக்கப் ஆனது. ஆனால் நயன்தாரா இப்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் சிம்பு இன்னமும் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

இப்போது சிம்புவுக்கும் போடா போடி படத்தின் மூலம் அவருடன் ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வாரிசு நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் காதல் பத்திக்கிச்சு.

விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் போடா போடி படத்தில் கீரியும் பாம்புமாய் இருக்கக்கூடிய கேரக்டரில் நடித்தனர்.

இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டால் நன்றாகவே இருக்கும் என்று, ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இது குறித்து வரலட்சுமி தரப்பிலும், சிம்பு தரப்பிலும் விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது வரலட்சுமி சரத்குமார் இல்லாமல் ஒரு தெலுங்கு படம் கூட வருவதில்லை. அந்த அளவிற்கு டோலிவுட்ட்டில் செம பிசியான வில்லியாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *