ஈகோ படுத்தும் பாட்டால் தடுமாறும் சிம்பு

ஈகோ படுத்தும் பாட்டால் தடுமாறும் சிம்பு
  • PublishedJune 10, 2025

சிம்புவை பொறுத்த வரைக்கும் 2020 ஆண்டுக்குப் பிறகான அவருடைய சினிமா வாழ்க்கை என்பது அவருக்கு மறுபிறப்பு தான்.

வந்தா ராஜாவா தான் வருவேன், செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் சிம்புவின் உடல் பருமனை பார்த்து இனி சிம்பு அவ்வளவுதான் என ஒட்டு மொத்த சினிமா வட்டாரமும் அவருக்கு பூசணிக்காய் உடைத்து ஓய்வெடுக்க அனுப்பியது.

ஒரே வருடத்தில் இப்போதைக்கு கிலோ எடை குறைத்து மீண்டும் களத்துக்கு வந்தார் சிம்பு. தன்னுடைய உடல் எடை குறைந்து, மீண்டும் சினிமாவுக்கு தயாராக இருக்கிறேன் என்பதை வெளி உலகத்திற்கு நிரூபிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் செய்தார்.

இதைத்தொடர்ந்து மக்கள் விரும்பும் கதைகளான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை கெட்டியாக பிடிக்க தொடங்கினார்.

திடீரென சிம்புவுக்கு அவருடைய பழைய ஈகோ எட்டிப் பார்த்ததோ என்னவோ, சட்டென உச்ச நடிகராக மாறிவிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதற்காக இவர் தேர்ந்தெடுத்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை.

தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இவர் நடிக்க காத்திருக்கும் படம் அதிக காலங்கள் எடுத்துக் கொள்ளும் படம் தான்.

குறுகிய காலத்திலேயே தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தாலே விட்ட இடத்தை பிடித்து விடலாம். ஒரே பாய்ச்சலில் முழு கிணத்தையும் தாண்டி விடலாம் என்று ஆசைப்பட்டால் அந்தரத்தில் கீழே விழ வேண்டும் என்று சிம்புவுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *