சிம்ரனின் புது பிஸ்னஸ்… 1,000க்கு அது…, 1,500க்கு இது….

சிம்ரனின் புது பிஸ்னஸ்… 1,000க்கு அது…, 1,500க்கு இது….
  • PublishedFebruary 12, 2024

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தை தன்வசம் வைத்திருப்பவர்தான் இடுப்பழகி சிம்ரன்.

மும்பை நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சிம்ரன், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தில் நடித்திருந்தவர், அதையடுத்து துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அதோடு சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ‛குட்கா பை சிம்ரன்’ என்ற பெயரில் ஒரு ஸ்டார் ஹோட்டலும் நடத்தி வருகிறார் சிம்ரன்.

அசைவம்- சைவம் என்ற இரண்டு உணவுகளும் இந்த ஹோட்டலில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, சைவ உணவு ரூபாய் ஆயிரமும், அசைவு உணவு 1500 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு பிறகு அதிகப்படியான பட வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த ஹோட்டல் பிஸ்னஸில் சிம்ரன் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *