யாரை பற்றியும் gossip நான் பேசுவது இல்லை…சிம்ரன்

யாரை பற்றியும் gossip நான் பேசுவது இல்லை…சிம்ரன்
  • PublishedMay 22, 2025

நடிகை சிம்ரன் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு விருது விழாவில் பேசும்போது, ‘நான் என் சக நடிகை ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினேன். உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என கூறினேன்.’

‘அதற்கு பதில் அனுப்பிய அவர் ஆன்டி ரோலில் நடிப்பதை விட இது சிறந்தது என பதில் அனுப்பினார். என்னை பொறுத்த வரை டப்பா ரோல்களில் நடிப்பதை விட ஆன்டி ரோலில் நடிக்கலாம்’ என சிம்ரன் பேசி இருந்தார்.

சிம்ரன் நடிகை ஜோதிகாவை தான் தாக்கி பேசி இருக்கிறார் என அப்போது செய்தி பரவியது. காரணம் அந்த நேரத்தில் ஜோதிகா நடித்து இருந்த டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி சமீபத்திய பேட்டியில் சிம்ரன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“நான் சொன்னதை மக்கள் break down செய்து பார்கிறார்கள். அது வெறும் ஊகத்தின் அடிப்படையான செய்தி தான். டப்பா கார்டெல் ஒரு நல்ல வெப் சீரிஸ். பல வெப் சீரிஸ்கள் வருகிறது, இதையும் பார்த்தேன்’ என சிம்ரன் கூறி இருக்கிறார்.

“நான் சொல்ல வந்தது அந்த நபருக்கு சென்று சேர்ந்துவிட்டது. நான் வேண்டுமென்றே அதை சொல்லவில்லை. அது நிஜமாகவே எனக்கு நடந்தது.

ஒரு முறை நட்பு கெட்டுவிட்டால் அதை மீண்டும் சரி செய்ய முடியாது. அதனால் அதற்கு எதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

தேவை என்பதால் தான் நான் அதை பற்றி பேசினேன். எனக்கு friends கிடையாது, யாரை பற்றியும் gossip நான் பேசுவது இல்லை.

எனக்கு ரொம்ப hurt ஆனது, அதனால் தான் அதை பற்றி மனதில் இருந்ததை பேசினேன். நான் அப்படி பேசியபிறகு அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தார் எனவும் சிம்ரன் கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *