பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று(நவ., 21) காலை நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் விழாவிற்கு தலைமை தாங்கினார். இதில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய அவர், பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.