மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி பிரியா

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி பிரியா
  • PublishedAugust 6, 2025

சிறகடிக்க ஆசை தொடர் நாயகி கோமதி பிரியா, மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரில் இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், மகாநதி தொடர் மலையாள மொழியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இந்தப் புதிய தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக சச்தேவ் பிள்ளை நடிக்கவுள்ளார்.

தமிழில் விஜய் – காவேரி (லஷ்மிபிரியா – சுவாமிநாதன்) நடிக்கும் பாத்திரங்களில் கோமதி பிரியா – சச்தேவ் நடிக்கவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் லஷ்மிபிரியா – சுவாமிநாதன் இணை, மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், கோமதி பிரியா – சச்தேவ் இணையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *