“இத செய்யனும்னா அதுக்கு ஹெல்ப் பண்ணனும்” இப்படி கேட்ட சிவகார்த்திகேயன்
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் திரைக்கு வந்தது. இந்த ஒரு படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
மறைந்த மேஜர் முகுந்த் வரஜராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படம் சிவகார்த்திகேயனை அடுத்தலெவலுக்கு கொண்டு சென்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இந்தப் படம் ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும், சுதா கொங்கரா இயக்கத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி நடிகர் எஸ்வி சேகர் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: 2007 ஆம் ஆண்டு என்னுடைய பையன் நடித்த படத்தை தொகுத்து வழங்க சிவகார்த்திகேயன் கிட்ட கேட்டிருந்தோம். அதற்கு ஒரு கண்டிஷன் போட்டாரு.
அப்போது கமல் ஹாசன் உடன் ஒரு செல்ஃபி எடுக்க ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்டார். அன்று அப்படி கேட்ட சிவகார்த்திகேயன் இன்று கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இது தான் வளர்ச்சி என்று எஸ்வி சேகர் கூறியுள்ளார்.