தெலுங்கு பக்கம் சாய்ந்த சிவகார்த்திகேயன் : கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

தெலுங்கு பக்கம் சாய்ந்த சிவகார்த்திகேயன் : கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!
  • PublishedJuly 13, 2023

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் பிரமோஷன் இப்போது பயங்கரமாக நடந்து வருகிறது. நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.ஷ

ஆனால் சிவகார்த்திகேயனின் நடவடிக்கை இப்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது மாவீரன் படத்திற்காக தமிழில் எந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் தெலுங்கில் நிறைய மீடியாவுக்கு தொடர்ந்து சிவகார்த்திகேயன் பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் மாவீரன் படம் தமிழில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தான் உருவாகி இருக்கிறது.

ஆனால் தெலுங்கில் பிரமோஷன் செய்வதற்கான காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் பிரின்ஸ் படத்தால் ஒரேடியாக தெலுங்கு பக்கம் சாய்ந்து விட்டார் சிவகார்த்திகேயன் என பலரும் விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *