பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் போடப்போகும் சரவெடி…

பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் போடப்போகும் சரவெடி…
  • PublishedDecember 18, 2024

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிசி நடிகராக வளம் வருகிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.

தற்போது சுதா கொங்காரா மற்றும் சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கு நடுவில் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஒருவேளை இதிலும் ராணுவ வீரரா? துப்பாக்கி 2 படமா இருக்குமா? என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிலையில், தற்போது ஷூட்டிங் முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் இன்னும் 8 அல்லது 9 நாட்கள் தான் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தை பற்றிய ஒரு முக்கிய அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசரை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.

ஏற்கனவே இந்த படம் மே மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், ரிலீஸ் தேதியின் announcement வருமா என்ற கேள்வியும் உள்ளது. சிவகார்த்திகேயன் தொடர்ந்து சுதா கொங்காரா படத்திலும் நடித்து வருவதனால், தனது ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க சொல்லி சிவகார்த்திகேயன் முருகதாஸை போட்டு படுத்தி எடுத்துவிட்டாராம்.

அதனால் தான் சீக்கிரம், படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார் முருகதாஸ். இந்த படத்தின் கடைசி பாகத்தில், பாடல் கட்சிகளின் ஷூட்டிங் தான் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

முன்பெல்லாம் ரஜினி, அஜித், விஜய் படங்களின் அப்டேட் பற்றி தான் ரசிகர்கள் அதிகம் வினவுவார்கள். ஆனால் அதே அளவுக்கு தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஆடியன்ஸ் வந்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *