ஏகப்பட்ட சர்ச்சைகள்…. பதிலடி கொடுக்க தயாரானார் சிவகார்த்திகேயன்

ஏகப்பட்ட சர்ச்சைகள்…. பதிலடி கொடுக்க தயாரானார் சிவகார்த்திகேயன்
  • PublishedDecember 26, 2023

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றது.

அயலான் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், அந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இதில், இமான் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது பேச்சில் பதிலடி கொடுக்கப்போவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த ஆண்டு இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை டோட்டலாக டேமேஜ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது மனைவியுடனான விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்றும், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார் என்றும் இமான் கூறியிருந்தார்.

இவர் கூறியது ஒரு பக்கம் இருந்தாலும், சிவகார்த்திகேயன் இதற்கு மறுப்பு தெரிவித்து கருத்து வெளியிடாமல் இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தாமதமாக அயலான் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அயலான் ஆடியோ லான்ச்சை இன்று நடத்த சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். இன்று மாலை ஹோட்டல் தாஜ் கோரமண்டலில் நடைபெற உள்ளது.

இதுவரை அது தொடர்பாக அமைதி காத்து வந்த சிவகார்த்திகேயன் இன்று அயலான் இசை வெளியீட்டு விழாவில் மெளனம் கலைப்பார் என்றும் பதிலடி கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *