குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் சிவகார்த்திகேயன் : வைரலாகும் புகைப்படங்கள்!
சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் ஆகிய படங்கள் உருவாகிவருகின்றன.
இந்த படங்கள் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஃபேமிலியாக போட்டோ சூட் எடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவருடைய உறவினர் பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.