நம்ம சிவாங்கி பாப்பாவுக்கு கல்யாணமா? என்னம்மா சொல்லுறீங்க?

நம்ம சிவாங்கி பாப்பாவுக்கு கல்யாணமா? என்னம்மா சொல்லுறீங்க?
  • PublishedMarch 29, 2024

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவாங்கி அதில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் போட்டியாளராக கலந்துகொண்டு, வெற்றிவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை, கோமாளியாக இருந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்த சீசன்களில் வாய்ப்பளிக்கப்படும். ஆனால் குக்காக கலந்துகொள்பவர்களுக்கு ஒரு சீசன் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் குக் ஆக கலந்துகொண்டதன் காரணமாக இனி சிவாங்கியால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. இதனால் சினிமாவில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் சிவாங்கி.

சிவாங்கி கடந்த 2022-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் பிரியங்கா மோகனின் தோழியாக நடித்திருந்த அவர், முதல் படத்திலேயே தன்னுடைய கியூட்டான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.

இதையடுத்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் காமெடி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ஆனால் அப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கி வருகிறார் சிவாங்கி.

இந்த நிலையில், சிவாங்கி தன்னுடைய திரெட்ஸ் பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், சோசியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம் முடிந்திருக்கிறது, இல்லை நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது அல்லது கர்ப்பமாக இருப்பதாக பதிவிடுகிறார்கள். நானும் தற்போது அந்த ஒரு கட்டத்தில் தான் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அப்போ உங்களுக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *