SK 25 படத்தின் டைட்டில் இதுவா? உங்களுக்கு இந்த கதை தெரியுமா?
சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் புறநானூறு பட அறிவிப்பு வெளியானது. ஆனால் இடையில் நடந்த சில சம்பவங்களால் இந்த கூட்டணி முறிந்தது.
அதைத்தொடர்ந்து அந்த கதையில் சிவகார்த்திகேயன் கமிட் செய்யப்பட்டார். அதேபோல் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அதை அடுத்து படத்தின் தலைப்பு புறநானூறு தானா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது ஆனால் பட குழு SK 25 என்றுதான் விளம்பரப்படுத்தினர்.
இதனால் புது டைட்டில் என்ன என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதன்படி தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்திற்கு 1965 என பெயர் வைத்துள்ளார்களாம்.
இதன் பின்னணியில் சில சென்டிமென்ட் காரணங்கள் இருக்கிறது. அதாவது இப்படத்தின் கதை இந்தி எதிர்ப்பு பற்றிய உண்மை சம்பவம் தான்.
60களில் நடந்த இந்த சம்பவத்தை பிரதிபலிக்கும் விதமாகத்தான் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதேபோல் மலையாளத்தில் 2018 என வெளிவந்த படம் பெரும் ஹிட் அடித்தது. கேரளா வெள்ள பாதிப்பு பற்றிய உண்மை சம்பவம் தான் இந்த கதை.
அதனால் செண்டிமெண்டாக வருடத்தை தலைப்பாக வைத்தால் வெற்றி பெறும் என்று கூட பட குழு நினைத்திருக்கலாம். அதனாலேயே இப்படி ஒரு தலைப்பை லாக் செய்து இருக்கின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம்.