102ஆவது வயதில் உயிரிழந்தார் சினேகனின் தந்தை

102ஆவது வயதில் உயிரிழந்தார் சினேகனின் தந்தை
  • PublishedOctober 27, 2025

25 ஆண்டு கால திரை பயணத்தில் சுமார் 500க்கும் அதிகமான படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென தனி இடம் பிடித்த சினேகன் வீட்டில் துயர சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது சினேகனின் தந்தை சிவசங்கரன் வயது 102 வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா எந்தவொரு விசேஷ நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அவர்களது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

எனினும் அவரது தந்தையின் மறைவு அவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில் சிவசங்கரனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக புதுகாரியாபட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *