திருமணத்திற்கு முன் காதலனுடன் வாழ்ந்த சோபிதா… கொளுத்திப்போட்ட பயில்வான்
நடிகர் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கும் இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதன், சோபிதா துலிபாலா திருமணத்திற்கு முன் காதலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார் என்ற அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
King 24/7 youtube சேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன்,
சமந்தாவுடனான பிரிவை அடுத்து தான் நாக சைதன்யாவிற்கும் சோபிதா துலிபாலாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சோபிதா துலிபாலாவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல.
என்.டி. ஆருக்கும் நாகேஸ்வர ராவிற்கும் பிரதான வில்லனாக நடித்தவர் தான் துலிபாலா. தமிழ் சினிமாவில் எப்படி அசோகன், நம்பியார் புகழ்பெற்ற வில்லன் நடிகர்களாக இருந்தார்களோ? அதே போல ஆந்திராவில் புகழ்பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் தான் துலிபாலா. அவரின் மகள் தான் சோபிதா துலிபாலா.
இவர் சினிமாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது நாக சைத்னயாவை திருமணம் செய்திருக்கும் சோபிதா துலிபாலாவிற்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்துள்ளார். ஹியூமன் பிராண்டிங் நிர்வாக இயக்குநரான பிரணவ் மிஸ்ராவை சோபிதா காதலித்து வந்தார்.
பணத்திற்கு குறைவே இல்லை, கோடி கோடியாக சொத்து வைத்து இருக்கும் அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருன் லிவ்விங்டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக ஆந்திர பத்திரிக்கைகளில் பல செய்திகள் வெளியானது. ஆனால், அந்த காதல் கைகூடாமல் போய்விட்டது.
இதையடுத்து, நாக சைத்தன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு கூட, பிரணவ் மிஸ்ரா உடன் சோபிதா துலிபாலா லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததற்கான போட்டோ ஆதாரங்களுடன் ஆந்திர பத்திரிகைகள் பல செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால், நாக சைதன்யா சோபிதாவின் பழைய வாழ்க்கை பற்றி நினைக்காமல் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார்.
சோபிதாவும் சமந்தாவை போல கவர்ச்சியாக நடிக்க தயங்கவே மாட்டார். இயக்குனர் 80 சதவீதம் காட்ட சொன்னால், 90 சதவீதம் கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை தான். இதனால், மீண்டும் நாக சைத்தன்யா வாழ்க்கையில் புயல் வீசினாலும் வீசலாம் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.