மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சில படங்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சில படங்கள்!
  • PublishedMay 28, 2023

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனர்களின் வரிசையில் அன்றில் இருந்து இன்றுவரை உச்சம் கண்ட ஒரு இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான். அவருடைய இயக்கத்தில் வெளியாகி வெற்றிக்கண்ட சில படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாயகன்: 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற படம் தான் நாயகன். இதில் கமல்,  நாசர்,  சரண்யா,  ஜனகராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.   இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 175 நாள் திரையில் ஓடிய பெருமையை பெற்றது.

தளபதி: 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இப்படத்தில் ரஜினி அம்மா பாசத்திற்கு ஏங்குவது போன்ற நடிப்பில் அசத்திருப்பார். மேலும் ரஜினி மற்றும் மணிரத்னம் காம்பினேஷனில் இப்படம் கமர்சியல் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌன ராகம்: 1986ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் கார்த்திக், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் மனோகர் கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருப்பார்.

பகல் நிலவு: 1985ல் மணிரத்னம் இயக்கத்தில் முரளி, ரேவதி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் முரளி நடித்திருப்பார். அக்காலத்தில் கேங்ஸ்டர் படமாக இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சத்ரியன்: 1990ல் மணிரத்னம் இயக்கத்தில் விஜயகாந்த், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் க்ரைம் சம்பந்தமான படமாகும். இப்படத்தில் நடித்த விஜய்காந்தின் நேர்மையான போலீஸ் கதாபாத்திரம் மக்களிடையே வெகுவாக பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *