பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த திடீர் முடிவு? சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த திடீர் முடிவு? சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
  • PublishedFebruary 17, 2024

குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான “நந்தி விருதுகளை” பெற்ற நடிகை தான் ஸ்ரீதிவ்யா.

கடந்த 2000வது ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். இவருடைய சகோதரியும் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்கின்ற திரைப்படத்தில் லதா பாண்டி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானார் அவர்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை சைமா வழங்கியது. அதன் பிறகு 2017ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆனால் ஸ்ரீதிவ்யாவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை. சொல்லப்போனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் வெறும் 3 திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

குறிப்பாக 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் அவர் திரைத்துறை பக்கமே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குறைந்து வர ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது அவர் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கார்த்தி 27 படத்தில் அவர் கார்த்தியின் தங்கையாக நடிக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *