திடீரென வந்த விஜய்யின் மனைவி சங்கீதா; எங்கு சென்றார்?

திடீரென வந்த விஜய்யின் மனைவி சங்கீதா; எங்கு சென்றார்?
  • PublishedOctober 10, 2024

மக்கள் மனதை இன்று பெரிய அளவில் உலுக்கிய இரண்டு விஷயங்கள் தான் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களின் மறைவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையாக செயல்பட்டு வரும் முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்த முரசொலி செல்வம் அவர்களது மறைவுவும்.

84 வயது நிரம்பிய முரசொலி செல்வம், இன்று அக்டோபர் மாதம் 10ஆம் தேதி காலை காலமானார். அவருடைய மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில்.. “திரு முரசொலி செல்வன் என்னுடைய நீண்ட கால நண்பர். பழகுவதற்கு எளிமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல ரத்தன் டாட்டா அவர்களுடைய மறைவுக்கு, அவரோடு எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான தளபதி விஜயின் மனைவி சங்கீதா, தற்பொழுது நேரடியாக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *