தங்கலான் திரைப்படம் தொடர்பில் வெளிவந்த சூப்பர் அப்டேட்!
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன், மாளவிக்கா மோகனன், பார்வதி, பசுபதி என பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஒத்திகையின் போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது.
இதனால் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
இந்த படத்தில் சியான் விக்ரம் இரண்டு கெட்டபில் நடிக்கிறாராம். அதில் ஒன்று 30 வருட இளமையான தோற்றத்திலும், மற்றொன்றில் மிகவும் வயதான கெட்டப்பிலும் நடிக்கிறார்.
சென்னையைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடக்கப்போகிறதாம். அதற்கான பணிகளில் தற்போது படக்குழு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது.
மேலும் தங்கலால் படத்திற்கான ஃப்ரீ இண்டிபெண்டன்ட் போர்ஷன் அனைத்தும் மதுரையில்தான் படமாக்கப்பட போகின்றனர். எனவே தங்கலான் மதுரையில் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்