மாரிமுத்துவின் மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்

மாரிமுத்துவின் மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்
  • PublishedSeptember 8, 2023

நடிகர் மாரிமுத்துவின் மரணம் திரைத்துறையில் ஈடுசெய்யமுடியாத இழப்பாக உள்ளது. பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இவரது மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் படத்திலும் மாரிமுத்து நடித்திருந்தார். இதேவேளை, எதிர்நீச்சல் நாடகம் குறித்து மாரிமுத்துவிடம்ரஜினிகாந்த் கலந்துரையாடியிருந்தமையும் மறக்க முடியாத ஒன்று.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பிரபலமானவர் மாரிமுத்து. இவர் இயக்குநர் என்பதை கடந்து பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இன்று தொலைகாட்சி தொடருக்கு டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இது அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *