சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த நடிகையை பெண் பார்க்க சென்றாராம் : யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த நடிகையை பெண் பார்க்க சென்றாராம் : யார் தெரியுமா?
  • PublishedJune 27, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுவயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்ததால் தனது மனைவி தன்மீது அதீத காதலும், அன்பும் வைக்க வேண்டும் என்று விரும்பினாராம். அப்படி ஒரு பெண்ணை தான் பார்த்தும் வந்தாராம்.

அவ்வாறாக தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை அவர் பார்த்து காதல் வயப்பட்டிருக்கிறார். அது வேறு யாரும் அல்ல. நம் மயில் நடிகை ஸ்ரீதேவிதான்.

ரஜினி ஸ்ரீதேவியை காதலித்து இருக்கிறார். ஸ்ரீதேவியும் அவரது அம்மாவும் ரஜினியிடம் எப்போதுமே கலகலப்பாக பேசுவார்களாம். ஆகையால்  நேரடியாகவே ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்று விடலாம் என்று ரஜினி அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்தச் சமயத்தில் ஸ்ரீதேவி வீட்டில் அபசகுனமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மேலும் ஸ்ரீதேவி அம்மாவிடமும் தான் அவரை காதலிப்பதாக ரஜினி கூறியிருக்கிறார். ஆனால் அவரோ ஸ்ரீதேவிக்கு இப்போது சினிமாவில் தான் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்று சொல்லி விட்டாராம்.

இதன் பிறகு லதாவை காதலித்து ரஜினி திருமணம் செய்து கொண்டாராம்.  அதுமட்டுமின்றி ரஜினி இடம் இருந்த அனைத்து கெட்ட பழக்கத்தையும் விட லதாதான்  முக்கிய காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *