ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முதன்முறையாக உங்களுக்காக…

ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முதன்முறையாக உங்களுக்காக…
  • PublishedDecember 17, 2023

நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவின் சொத்து மதிப்பு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஜோதிகாவில் சினிமாவில் அடையாளம் கொடுத்தது தமிழ் படங்கள் தான். தமிழில் இவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா.

இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ஜோதிகாவும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. இதற்கு அடுத்தபடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதன்முறையாக நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா.

இப்படத்தில் நடித்தபோது தான் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாவது படமான குஷியிலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா. இப்படம் பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ஜோதிகாவை ஒரு டாப் ஹீரோயின் அந்தஸ்த்துக்கு கொண்டு சென்றது.

பின்னர் கமல்ஹாசன் உடன் தெனாலி, அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம், விஜய்யுடன் திருமலை, ரஜினிகாந்தின் சந்திரமுகின் என வரிசையாக வெற்றிப்படங்களில் நடித்து ராசியான ஹீரோயினாகவும் வலம் வந்தார் ஜோ.

இப்படி இருக்கையில் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தபோது சூர்யா – ஜோதிகா இடையேயான காதல் தீவிரமாகி இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தனர். அப்போது சூர்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களை சம்மதிக்க வைத்து ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, தன் காதலுக்காக சினிமா கெரியரையும் தியாகம் செய்தார்.

திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர். இவர்கள் பிறந்து வளார்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா, தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அப்படி இவர் நடித்த 36 வயதினிலே, ராட்சசி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த காதல் தி கோர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

நடிகை ஜோதிகா தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருவதால் அவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

அதுமட்டுமின்றி சூர்யாவுடன் சேர்ந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஜோதிகா. அந்நிறுவனம் மூலம் சூரரைப் போற்று, 36 வயதினிலே, கார்கி, ஜெய் பீம் என பல வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அதோடு தயாரிப்பாளராகவும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார் ஜோதிகா.

இவருக்கு சொந்தமாக சென்னையில் 2 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட பங்களா இருக்கும் நிலையில், அண்மையில் மும்பையில் செட்டில் ஆன போது ரூ.70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றையும் சொந்தமாக வாங்கி இருந்தார் ஜோதிகா.

குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகி உள்ள ஜோதிகா, அங்கு இந்தி படமொன்றிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதுதவிர தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து அதன்மூலமும் பல கோடி வருமானம் ஈட்டி வருகிறார் ஜோ.

நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.330 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பை விட டபுள் மடங்கு அதிகமாகும்.

இதுதவிர நடிகை ஜோதிகாவுக்கு சொந்தமாக பிஎம்டபுள்யூ, ரேஞ்ச் ரோவர், ஆடி போன்ற ஆடம்பர சொகுசு கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *