தமன்னா – விஜய் வர்மா பிரிந்துவிட்டார்களா? தீயாய் பரவும் செய்தி

மில்க் பியூட்டி நடிகை இப்போது சோகத்தில் இருக்கிறாராம். இதற்கு காரணம் ஆசை ஆசையாக காதலித்து வந்த அந்த நடிகர் திடீரென எஸ்கேப் ஆனது தான்.
ஏற்கனவே நடிகை வாரிசு நடிகரை உருகி உருகி காதலித்தார். ஆனால் அவரோ திடீரென குடும்பம் தான் முக்கியம் என நடிகைக்கு டாட்டா காட்டினார்.
அந்த விரக்தியில் இருந்து எப்படியோ மீண்டு வந்த நடிகை திரும்பவும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அந்த பாலிவுட் நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருக்கமான காட்சிகளில் கூட நடித்து பரபரப்பை கிளப்பினார்கள். அதேபோல் பார்ட்டி மீட்டிங் டேட்டிங் என என்ஜாய் செய்து வந்தனர்.
விரைவில் இந்த ஜோடி திருமண அறிவிப்பை வெளியிடும் என்று கூட பேசப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால் அந்த நடிகர் வேறு ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்கிறாராம்.
மில்க் பியூட்டி நடிகைக்கு இந்த விவரம் தெரியாமல் இருந்தது. ஆனால் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த இந்த தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது.
உடனே சுதாரித்த நடிகை காதலரிடம் திருமணம் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறார். ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி அந்த நடிகரும் நாளை கடத்தி வந்து இருக்கிறார்.
ஆனால் நடிகையின் டார்ச்சர் அதிகமான நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள். நடிகர் தனக்கு செய்த துரோகத்தை எண்ணி தற்போது அம்மணி கண்ணீர் வடித்து வருகிறாராம்.