ஒரேநாளில் 2 ஜெயிலர் படம்…. இறுதி நேரத்தில் இப்படியா நடக்கனும்?
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
ஜெயிலர் படம் சிலைக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதனிடையே வருகிற ஜூலை 28-ந் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. அதனால் இப்படத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கு கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பெயருடன் மலையாளத்திலும் ஒரு திரைப்படம் உருவாகி உள்ளதால், தமிழ் ஜெயிலர் படக்குழுவிடம் படத்தின் தலைப்பை மாற்றி கேரளாவில் ரிலீஸ் செய்யும்படி மலையாள ஜெயிலர் டீம் வேண்டுகோள் வைத்தது.
ஆனால் இதனை தமிழ் ஜெயிலர் படக்குழு ஏற்கவில்லை. இதனால் தமிழ் ஜெயிலர் படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், தங்களது ஜெயிலர் படமும் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதியே ரிலீஸ் ஆகும் என மலையாள ஜெயிலர் படக்குழு அறிவித்துள்ளதால் தற்போது கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.
இரண்டு படமும் ஒரே பெயருடன் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் தமிழ் ஜெயிலர் படத்தின் வசூலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் தரப்பில் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.