அதிரடியாக குறைந்த நம்பர் நடிகையின் சம்பளம்.. பெரிய ஹீரோவோட டீல் பேசுறாராம்

அதிரடியாக குறைந்த நம்பர் நடிகையின் சம்பளம்.. பெரிய ஹீரோவோட டீல் பேசுறாராம்
  • PublishedJanuary 18, 2024

சினிமாவில் ஒரு காலத்தில் பீக்கில் இருந்த நம்பர் நடிகை நிலைமை சமீப காலமாக ரொம்பவே கவலைக்கிடமாக மாறியிருக்கிறது. அதிலும் அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் எல்லாமே நஷ்டம் அடைந்து வரும் நிலையில், இனிமேலும் நடிகை கேட்கிற பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முடியாது என சினிமா தயாரிப்பாளர்கள் எல்லாம் செங்கொடி தூக்க ஆரம்பித்து விட்டதால், நடிகை திடீரென தனது ரூட்டை தற்போது மாற்றியிருக்கிறார் என்கின்றனர்.

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளத்தை அந்த நடிகை தான் வாங்கி வருகிறார் எனக் கூறுகின்றனர். ஆனால், சமீப காலமாக அந்த நடிகை நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் அவர் வாங்கும் சம்பளத்தில் பாதி கூட வசூல் செய்யாத சூழலில் நடிகை மீது தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.

இவருக்கு பதிலாக ஒரு கோடிக்கும் குறைவான சம்பளத்தை வாங்கும் நடிகையை வைத்து படத்தை எடுத்தாலே கொள்ளை லாபம் பெறலாமே என தயாரிப்பாளர்கள் நடிகையின் காதுபடவே பேச ஆரம்பித்து விட்டனர்.

நம்பர் நடிகைக்கு தொடர்ந்து பல சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. திருமணத்துக்கு பின்னர் தான் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை ஒன்று மாறி ஒன்று வந்துக் கொண்டே இருக்கிறது என்றும் யாராவது ஏதாவது செய்து விட்டார்களா? என்றும் கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அந்தளவுக்கு நம்பர் நடிகைக்கு அடிமேல் அடி விழுந்துக் கொண்டே வருகிறது.

சோலோ ஹீரோயினாக நடித்து வரும் படங்கள் எல்லாம் நடிகைக்கு ஸ்டார் அந்தஸ்த்தை உருவாக்கி கொடுக்கும் என நினைத்தால், அதற்கு பதிலாக நடிகைக்கு ஃபிளாப் ஸ்டார் அந்தஸ்த்தையே பெற்றுத் தருகின்றன. இதற்கு மேலும், நடிகை நடிக்கும் படங்களை வாங்கப் போவதில்லை என விநியோகஸ்தர்களும், தயாரிக்க தைரியமில்லை என தயாரிப்பாளர்களும் கையை விரித்து வருவதாக கூறுகின்றனர்.

இப்படியே போனால் சினிமாவை விட்டு விட்டு தொழிலை மட்டுமே பார்க்க வேண்டியது தான் என்பதால் நடிகை உஷாராக தனது சம்பளத்தை தாராளமாக குறைத்துக் கொள்கிறேன் என பெரிய நடிகர் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் டீல் பேசியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சீக்கிரமே அந்த நடிகரின் அடுத்த படத்தில் நம்பர் நடிகை ஜோடி போட்டு நடித்தால் மீண்டும் முதலிடத்தை பிடித்து விடுவார் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *