டாப்சி திருமணத்தின் இரகசிய வீடியோ வெளியானது… அதிர்ச்சியில் தம்பதியினர்

டாப்சி திருமணத்தின் இரகசிய வீடியோ வெளியானது… அதிர்ச்சியில் தம்பதியினர்
  • PublishedApril 4, 2024

டாப்சி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் ஆடுகளம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்த நிலையில், மத்யாஸ் போ என்பவரை டாப்சி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் ரொம்பவே ரகசியமாக நடந்தது.

டாப்சி டென்மார்க்கை சேர்ந்த முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்துவந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக இரண்டு பேரும் காதலித்து வந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் நடைபெற்றது.

திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தங்களுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள் இரண்டு பேரும்

இந்நிலையில் டாப்சி – மத்யாஸ் போ ஆகியோரின் திருமணம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் இரண்டு பேரும் திருமண உடையில் ஜொலிக்கின்றனர். மேலும் டாப்சி ஜாலியாக நடனம் ஆடியபடி மணமேடைக்கு வருகிறார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் இதேபோன்று வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கமெண்ட்ஸ் மூலம் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இருந்தாலும் டாப்சி இதனால் செம அப்செட் என்று கூறப்படுகிறது.

அதாவது தனது திருமணம் தொடர்பான சிங்கிள் ஃபோட்டோக்கூட வெளியே செல்லக்கூடாது என்பதில் ரொம்பவே தீர்க்கமாக இருந்தாராம் டாப்சி. ஏனெனில் இந்த வீடியோவை தேவைப்பட்டால் சேனல்களுக்கு விற்று பணம் பார்க்கலாம் என்ற பிளானிலும் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இப்போது வீடியோ வெளியானதால் தான் போட்டிருந்த பிளான் வேஸ்ட் ஆகிவிட்டதே என்று அப்செட்டில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *