விஜயின் மகனை இயக்க ஆசைப்படும் தேவையானியின் கணவர்!
90களில் டாப் நடிகையாக ஹோம்லி லுக்கில் வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் தற்போது சின்னத்திரையிலும் மவுசு குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் சினிமாவில் தொடர்ந்து இயக்குனர் ராஜகுமரனின் நான்கு படங்களில் நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவிற்கு ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுக்கப் போகிறார். அதுவும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன்தான் இணைந்து நடிப்பார் என இனியாவின் தந்தை இயக்குனர் ராஜகுமாரன் தன்னுடைய பேராசையை சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர் முதல் முதலாக முறையாக இயக்கிய சூப்பர் ஹிட் படமான ‘நீ வருவாய் என’ என்ற படத்தை முதலில் அஜித்இ விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் விஜய் ரொம்ப பிசியாக இருந்ததால் அவருக்கு பதில் பார்த்திபன் அஜித்துடன் நடித்து ஹிட் கொடுத்தார்.
எனவே முதல் பாகத்தில் தான் விஜய் நடிக்கலை, இரண்டாம் பாகத்திலாவது அவருடைய மகனை நடிக்க விடுங்கள் என்று அவரிடமே நேரடியாக கேட்கப் போகிறாராம்.