தலைவர் 171 இல் ரஜினியின் ரோல் இதுதானா? ரசிகர்கள் கேள்வி

தலைவர் 171 இல் ரஜினியின் ரோல் இதுதானா? ரசிகர்கள் கேள்வி
  • PublishedMarch 31, 2024

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி. படத்தின் பெயர் ஏப்ரல் 22ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கிறது.

ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஆனால் கண்டிப்பாக சோஷியல் மெசேஜ் இருக்கும் என்று எத்ர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தலைவர் 171ல் ரஜினிகாந்த்தின் கேரக்டர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அதன்படி ரஜினிகாந்த் இப்படத்தில் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும்; தங்கத்தை கடத்தும் கேங்ஸ்டர்தான் ரஜினிகாந்த் என்றும் சொல்லப்படுகிறது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், இந்தப் படத்தையும் கேங்ஸ்டர் ஃபார்முலாவில் எடுக்கிறாரா லோகேஷ் கனகராஜ். மீண்டும் மீண்டும் அதே ஃபார்முலாவை தொடர்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். முன்னதாக, இந்தப் படம் 100 சதவீதம் தன்னுடைய ஸ்டைலில்தான் இருக்கும் என்று லோகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *