‘தளபதி 69’ படம் டிராப்?? தீயாய் பரவும் அதிர்ச்சித் தகவல்

‘தளபதி 69’ படம் டிராப்?? தீயாய் பரவும் அதிர்ச்சித் தகவல்
  • PublishedJune 14, 2024

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த கடைசி படமான தளபதி 69 கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோட் பட ரிலீஸ் ஒரு புறம் இருக்க, விஜய் நடிக்க உள்ள அடுத்த படமான தளபதி 69 குறித்தும் தொடர்ந்து அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் விஜய்யின் 69வது படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இப்படம் தான் நடிகர் விஜய் நடிக்க உள்ள கடைசி படம் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தற்போது திடீரென அப்படம் டிராப் ஆக வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட தொடங்கி இருக்கிறது. முன்னதாக கமல்ஹாசனை வைத்து ஹெச்.வினோத் இயக்க இருந்த படம் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *