’தளபதி 68’ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? ஆரம்பிச்சிட்டாங்கய்யா…. ஆரம்பிச்சிட்டாங்க….

’தளபதி 68’ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? ஆரம்பிச்சிட்டாங்கய்யா…. ஆரம்பிச்சிட்டாங்க….
  • PublishedNovember 16, 2023

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று விஜய் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், 2012-ல் வெளியான ‘லூபர்’ [Looper] படத்தின் ரீமேக் படம்தான் ‘தளபதி 68’ என்று கூறுகிறார்கள். லூபர் படத்தில் ஹாலிவுட் புகழ் ப்ரூஸ் வில்லிஸ், ஜோசப் கார்டன் லெவிட் மற்றும் எமிலி ப்ளண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

2044-ல் நடக்கும் கதைதான் இந்த லூபர் திரைப்படம். இதில் முக்கிய கதாபாத்திரமான ஜோ, பணத்திற்காக கொலை செய்யும் ஒரு தொல்ரீதியான கொலைக்காரன். இவர் கான்சாஸ் சிட்டி க்ரைம் சிண்டிகேட்டுக்காக வேலைப்பார்க்கிறார். இவர் செய்யும் அட்டகாசமான ஆக்‌ஷன்தான் ‘லூபர்’.

இப்போது இந்த கதையைப் போலவே ’தளபதி 68’ கதை இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *