தளபதி 68ஆவது படத்தின் டைட்டில் இதுவா?

தளபதி 68ஆவது படத்தின் டைட்டில் இதுவா?
  • PublishedDecember 19, 2023

லியோ படத்தை முடித்த கையோடு விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” படத்தில் நடிக்கிறார்.

விஜய்யுடன் இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறாராம்.

இதில் ஒரு வேடம் 19 வயது கெட்டப்பில் இருக்கும் வேடம் என்றும் இதற்காக புதிய டெக்னாலஜியை இயக்குனர் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

யுவன் இசையமைக்க AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது படத்திற்கு படக்குழு “பாஸ்” என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பெயர் தான் சரியானதா, விஜய்யின் 68 பட டைட்டிலா என்பதை புத்தாண்டு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *