தளபதி 68 அப்டேட்டுக்காக காத்திருப்பவரா நீங்கள்?? வெளியானது சூப்பர் தகவல்

தளபதி 68 அப்டேட்டுக்காக காத்திருப்பவரா நீங்கள்?? வெளியானது சூப்பர் தகவல்
  • PublishedSeptember 26, 2023

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 68 படத்தின் பூஜை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய் நடித்து முடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ள லியோ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே ட்ரெய்லரும் ரிலீஸாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக வெங்கட் பிரபுவும் விஜய்யும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு இசையமைக்கிறார்.

இதில் விஜய்க்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. இவர்களில் வயதான விஜய்க்கு சினேகா ஜோடி என்றும் இள வயது விஜய்க்கு ப்ரியங்கா மோகன் ஜோடி என்றும் தகவல்கள் கசிகின்றன.

சமீபத்தில் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்பட்டது. அதனை பகிர்ந்த வெங்கட் பிரபு எதிர்காலத்துக்கு வருக என்று கூறியிருந்தார். எனவே ஒருவேளை இது டைம் ட்ராவலாக உருவாகுமோ என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.

சூழல் இப்படி இருக்க படத்தின் பூஜை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

இப்படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதமே நடந்திருக்க வேண்டியது. ஆனால் லியோ ரிலீஸுக்காக அது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் பூஜை அக்டோபர் மாதம் முதல் வாரம் போடப்பட்டு கையோடு ஷூட்டிங் கிளம்பும் திட்டத்தில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *