அடேங்கப்பா.. “தளபதி 68”இல் விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்க இதுதான் காரணமா?
தளபதி 68ல் அதிகப்படியாக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், என்ன காரணத்திற்காக ஏஜிஎஸ் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை வழங்க ஒப்புக் கொண்டது என்பது குறித்தான தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாவதற்கு 6 வாரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தளவுக்கு அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில், படத்தின் வசூல் இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட்டை இந்த ஆண்டு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் நடிகர்கள் 100 கோடி சம்பளத்தை நெருங்காத நிலையில், நடிகர் விஜய் லியோ படத்துக்காக 125 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், அனுராக் காஷ்யப், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படம் 700 முதல் 1000 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்துக்கு அவருக்கு சம்பளமாக 200 கோடி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் தனது சம்பளத்தை 200 கோடியாக உயர்த்தப் போவதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், 75 கோடி ரூபாய் அதிகமாக எப்படி விஜய்க்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்கிற கேள்விக்கு இப்படியொரு காரணம் இருப்பதாக திடீரென கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.
பிகில் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து படம் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் எல்லாம் சென்று பெரியளவில் செலவு செய்ய முடிவு செய்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிசினஸ் ஆரம்பத்திலேயே பெரியளவில் இருக்கும் நிலையில், ஒரு பாதி ஷேரையே சம்பளமாக விஜய் கேட்டிருந்தாராம்.
பாதி ஷேர் என்றால் 250 கோடி வரை சம்பளமாக கொடுக்கக்கூடிய நிலை வரும் என்பதை கணக்குப் போட்டுத் தான் உஷாராக ஏஜிஎஸ் நிறுவனம் 200 கோடியை ரவுண்டாக கொடுத்து விஜய் தரப்பை ஆஃப் செய்து விட்டது என்கின்றனர்.