“தளபதி – 69” படத்தை இயக்குவது யார் தெரியுமா? கேம் ஸ்டார்ட்…

“தளபதி – 69” படத்தை இயக்குவது யார் தெரியுமா? கேம் ஸ்டார்ட்…
  • PublishedFebruary 4, 2024

தளபதி விஜய் தற்போது கமிட் செய்துள்ள GOAT படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்தில் நடித்து முடித்துவிட்டு நடிப்பிலிருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே அவரது தளபதி 69 படத்தை யார் இயக்குவார்கள் என்று சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

முன்னதாக வெற்றி மாறன் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

எனினும் இதைற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அதாவது, இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி விஜய் சார்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *