பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிடும் தளபதியின் GOAT.. மகிழ்ச்சியில் அர்ச்சனா கல்பாத்தி

பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிடும் தளபதியின் GOAT.. மகிழ்ச்சியில் அர்ச்சனா கல்பாத்தி
  • PublishedSeptember 7, 2024

தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

படம் நேற்று முன்தினம் அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 400 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், இந்த வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என கூறப்படுகின்றது.

இது படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை அசால்ட்டாக ஈட்டிக் கொடுத்துவிடும் என கூறுகின்றனர். இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸில், ரூபாய் 25 கோடி வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் படம் உலகம் முழுவதும் எப்படியும் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதனல் முதல் இரண்டு நாளில் படம் ரூபாய் 230 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. மேலும் இன்றும் நாளையும் விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.

இப்படியான நிலையில் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில், ” Thalapathy Takeover at the BoxOffice G.O.A.T” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் படத்தின் வசூல் முதல் நாளை விட அதிகமாக இரண்டாவது நாளில் வசூல் செய்திருப்பதால்தான் அர்ச்சனா இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *