தளபதி விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா?
  • PublishedJanuary 22, 2024

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Greatest Of All Time எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

பிரம்மாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும் என்பது போல் சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி Greatest Of All Time படத்தை வெளியிட்ட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

விஜய் நடிப்பு மற்றும் நடனம் எப்படி என்று எமக்கு தெரியும். ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு கார் பிரியர் என்பதும் நமக்கு தெரிந்ததுதான்.

அந்த வகையில், நடிகர் விஜய்யிடம் விலைஉயர்ந்த Rolls Royce கார் இருக்கிறது என்று நாம் அனைவரும் அறிவோம். இதன் விலை ரூ. 4.63 கோடி முதல் ரூ. 5.28 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், Rolls Royce கார் ஒரு பக்கம் இருக்க BMW i7 xDrive 60 என்கிற புதிய சொகுசு கார் ஒன்றை நடிகர் விஜய் வாங்கியுள்ளாராம்.

எலக்ட்ரிக் வகையில் உருவாகியுள்ள இந்த காரின் விலை ரூ. ரூ. 2.30 கோடி முதல் ரூ. 2.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *