பிரபல நடிகர்களை வைத்து மாஸ் பிளான் போடும் தானு…என்ன தெரியுமா?

பிரபல நடிகர்களை வைத்து மாஸ் பிளான் போடும் தானு…என்ன தெரியுமா?
  • PublishedJune 7, 2025

வாடிவாசல் படத்திற்கு சூர்யாவிடம் இரண்டு வருடங்கள் கால் சீட் கேட்டுள்ளார் வெற்றிமாறன். டேட் கொடுப்பது பிரச்சனை இல்லை, படம் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் எப்பொழுது முடிவடையும் என்று சூர்யா கேட்டதற்கு வெற்றிமாறனிடம் சரியான பதிலில்லை.

வாடிவாசல் படம் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பு விதை போடப்பட்டது. அப்பொழுது சூர்யா வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் 30 கோடிகள், ஆனால் இன்று சூர்யாவின் மார்க்கெட் 65 கோடிகளை தாண்டி விட்டது. இதனால் சூர்யா பழைய சம்பளத்துக்கு நடித்து தர வேண்டியுள்ளது.

சூர்யா, இந்தப் படத்தை ஒரே பாகமாக தான் எடுக்க வேண்டும். இரண்டு பாகங்களாக எடுக்க கூடாது என பல கண்டிஷன்கள் போட்டுள்ளார். இதுபோன்று ஓவர் கண்டிஷனால் என்ன செய்வதென்று தெரியாமல் வெற்றிமாறன் இந்த ப்ராஜெக்ட்டை டிராப் செய்துவிட்டாராம். சூர்யாவும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

வாடிவாசல் படத்தை தயாரிக்கவிருந்த கலைப்புலி எஸ் தானு, ஒரு பக்கம் வெற்றிமாறனுக்கும், மறு பக்கம் சூர்யாவிற்கும் அட்வான்ஸ் தொகை கொடுத்துள்ளார். இதனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கால் சீட்டுகள் அவரிடம் உள்ளது. இதை வைத்து அவர் டபுள் பலாப்பழத்தை சுருட்டியுள்ளார்.

வெற்றிமாறன் கால் சீட்டை வைத்து சிம்புவுடனும், சூர்யாவின் கால் சீட்டை வைத்து மாரி செல்வராஜ்வுடனும். தலா ஒரு படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார் தானு. ஏற்கனவே தனுஷ் வெற்றிமாறனுக்கு பல நாட்களாக தூது விட்டு வந்தார். ஆனால் இப்பொழுது அந்த அதிர்ஷ்டம் சிம்பு கையில் தானாக போய் உட்காருந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *